8 ஆவது வரைக்கும் என் பக்கத்துல உட்கார்ந்து இருந்த ரமேஷ் சொல்வான் , "எங்க மாமா ரயில்வே ல வேல பார்கிறதால எங்க அக்காவுக்கு டிக்கெட் free, அதனால இந்த முழு பரீட்சை லீவுக்கு நான் பாலக்காடு போறேன்டா" னு . என் பக்கத்துக்கு மாமா வோ தூரத்து மாமா வோ ,அதிக பட்சம் அழகர்கோவிலையும் அதனை அடுத்த மேலூரையும் தாண்டியது கிடையாது .அதனாலேயே 20 வருஷம் வரை ரயில் பயணம் என்பது , "அங்க பாரு ஏரோ பிளேன் போகுது " னு வேடிக்கை பார்க்கிற மாதிரி தான் எனக்கும் இருந்தது ..
ராஜாஜி பூங்கா வுல ஆரம்பிச்சு சித்திரை பொருட்காட்சி னு எங்க போனாலும் ரயில் வண்டில போகணும்னு தான் தோனுச்சு ....அப்போ எல்லாம் அரைபாடி லாரிதான் அதிகமா இருக்கும் ...asshok leyland லாரி முகத்தை பார்த்தா மட்டும் சிங்கம் முறைக்கிற மாதிரி இருக்கும் ...ஆனால் பார்க்லையும் பொருட்காட்சியிலையும் ரயில் பார்க்கும்போது மயில், வாத்து முகம் வரைஞ்சதலோ என்னவோ சீக்கிரம் பிடித்து போய்விட்டது ரயில். ..ஆண்டு விழா னு வந்துட்டாலே யாராச்சும் மிமிக்ரி செய்யும்போது கண்டிப்பா ரயில் போற மாதிரி குரல் இல்லாம இருக்காது ...plus one படிக்கறப்ப பள்ளிக்கூடம் முடிஞ்சா பெரியார் பஸ் ஸ்டாண்ட்ல பஸ் ஏறுனா உட்கார்ந்து கிட்டே போயிறலாம் , ஆனால் நடந்து வந்து சேதுபதி ஸ்கூல்ல தான் பஸ் ஏறுவோம் ...அங்க ஆரம்பிச்சு மீனாக்ஷி பஜார் வரைக்கும் ஜங்ஷன் மதிற் சுவர பார்த்துகிட்டே வருவோம். எத்தனை ரயில் இருக்கு , எத்தனை பெட்டி இருக்குனு .இப்படித்தான் ரயில் பயணம் செய்யாமலே அதன் மீதான ஒரு பிடிப்பு தொடர ஆரம்பித்தது . சினிமா கதாநாயகிகள் மீது ஏற்படுவதை போல ....
படித்துகொண்டிருக்கும்போது ஒரு வார பத்திரிகையில் வேலைக்கான நேர்முகத்தேர்வுக்கு வர சொல்லி இருந்தார்கள் சென்னைக்கு ...பயண செலவு நிர்வாகம் ஏற்றுக்கொள்ளும் என்ற அட்டையுடன் லெட்டர் வந்தது .. முதன்முறையாக 2007 ஜீன் மாதம், ரயில் நிலையத்தில் டிக்கெட் எடுக்க தெரியாமலும் எந்த ரயில் ல போகணும்னு தெரியாமலும் ஒண்ணுமே தெரியாத நானும் .. எரிச்சலோடு டிக்கெட் கொடுத்துகொண்டிருந்த பெண்ணும் ,,,, ’பாண்டியன் ல வைடிங் 180 , நெல்லை ல போற்றலாம?’ என்றார் .....நான், ’எதுக்கு திருநெல்வேலி போகணும் திருநெல்வேலி சுத்தி போனா லேட் ஆகிடும்னு சொன்னதும் அந்த பொண்ணு என்கிட்டே கேட்ட கேள்வி "என்ன படிக்கிறீங்க ". காலேஜ் னு நா சொல்லவும் ," தயவு செஞ்சு வெளில சொல்லிரதீங்கனு "சொல்லிட்டு டிக்கெட் குடுத்துருச்சு. ...(அதன் பிறகு அதிக முறை ரயில்வே ஸ்டேஷன் போகும்போது தான் தோன்றியது அங்க வேல பார்கிற 100 க்கு 80 பேர் யார் மேலயாவது எரிஞ்சு விழுவாங்கன்னு )அவமானமாகத்தான் இருந்தது , இருந்தும் தொடர ஆரம்பித்தது ரயில் மீதான ஒரு ஈடுபாடு , கசாப்பு கடைக்காரர் குடுக்கிற கீரைக்காக காத்திருக்குற ஆடு மாதிரி.
ரயில் ஏற்றுவதற்காக நண்பன் வந்தபோது ,கண்ணு முன்னாலேயே ரயில் நகர்ந்தது ,,,,"டேய் பாலா ட்ரெயின் போகுது போகுது" கத்தத்தான் முடிஞ்சது ...டேய் இது ஒன்னும் பஸ் இல்ல வண்டில overtake பண்ணி வாடிப்பட்டியில ஏறுரதுக்கு ,அடுத்து தூத்துக்குடி வண்டி வரும் .அன் ரிசர்வ் , அதுலயாவது ஒழுங்கா ஊருக்கு போடா" னு சொல்லிட்டு போய்ட்டான் ..ஒரு மணி நேரம் கழிச்சு போன் பண்ணுனான் என்னடா இடம் கிடச்சதானு ...’இல்ல மாப்ள’ னு நான் சொல்லவும் , ’விடுடா பாரதிராஜா லாம் வித் அவுட் ல நின்னுக்கிட்டுதான் போனாருன்னு ஒரு புக் ல படிச்ருக்கிறேன் னு சொல்லிட்டு வச்சிட்டான்’ ..அப்போதான் தெரிந்தது ஏன் பள்ளிக்கூடத்து புங்க மரத்துல தண்டவாள துண்டை bell அடிக்க வச்சாங்கன்னு ... ...சின்ன தண்டவாள இரும்பு துண்டுல இன்னொரு இரும்பு உரசுரது பயம் தான் ...லேட் ஆனன பி.டி. சார் அடிப்பாருனு அவசர அவசரமா போயிருக்கேன். வாத்தியார் நேரம் தவறலாம்.மாணவண் தவறமுடியாது.ரயில் நேரம் தவறலாம்.பயணி நேரம் தவறமுடியாது.
ரயில் ஏற்றுவதற்காக நண்பன் வந்தபோது ,கண்ணு முன்னாலேயே ரயில் நகர்ந்தது ,,,,"டேய் பாலா ட்ரெயின் போகுது போகுது" கத்தத்தான் முடிஞ்சது ...டேய் இது ஒன்னும் பஸ் இல்ல வண்டில overtake பண்ணி வாடிப்பட்டியில ஏறுரதுக்கு ,அடுத்து தூத்துக்குடி வண்டி வரும் .அன் ரிசர்வ் , அதுலயாவது ஒழுங்கா ஊருக்கு போடா" னு சொல்லிட்டு போய்ட்டான் ..ஒரு மணி நேரம் கழிச்சு போன் பண்ணுனான் என்னடா இடம் கிடச்சதானு ...’இல்ல மாப்ள’ னு நான் சொல்லவும் , ’விடுடா பாரதிராஜா லாம் வித் அவுட் ல நின்னுக்கிட்டுதான் போனாருன்னு ஒரு புக் ல படிச்ருக்கிறேன் னு சொல்லிட்டு வச்சிட்டான்’ ..அப்போதான் தெரிந்தது ஏன் பள்ளிக்கூடத்து புங்க மரத்துல தண்டவாள துண்டை bell அடிக்க வச்சாங்கன்னு ... ...சின்ன தண்டவாள இரும்பு துண்டுல இன்னொரு இரும்பு உரசுரது பயம் தான் ...லேட் ஆனன பி.டி. சார் அடிப்பாருனு அவசர அவசரமா போயிருக்கேன். வாத்தியார் நேரம் தவறலாம்.மாணவண் தவறமுடியாது.ரயில் நேரம் தவறலாம்.பயணி நேரம் தவறமுடியாது.
தூத்துக்குடி எக்ஸ்பிரஸ்ல 8 மணி நேரம் நின்னுகிட்டே போனபோது கால் வலிக்கல ...அப்ப்பாடா நம்ம வம்சத்துலையே முதல் ஆளா ரயில் ல வந்துட்டோம் னு நினைச்சு .அதுக்கு முன்னால அப்பா பெரியப்பா எல்ல்லாம் எதாவது வேலை னு சென்னை போன லாரி புடிச்சு போயிட்டு வந்ததாய் சொல்லி தான் கேள்விப்பட்டிருக்கிறேன் ...இப்படித்தான் என் முதல் ரயில் பயணம் தொடங்கியது .முதல் பயணத்தில் எல்லோரும் ரயிலை அனுபவித்தது போல் எனக்கு அனுபவிக்க தெரியவில்லை ...ஆச்சர்யம் தன அதிகமானது .... ஏதோ தடக் தடக் னு ஓடும் போது குழந்தைகளை ஆட்டும் தொட்டில் போலத்தான் தெரிந்தது ..அதில் உறங்கும் குழந்தையாய் என்னையும் பாவித்துகொண்டுதான் அன்றைய பயணம் கழிந்தது . ..
அதற்கு பிறகு எனக்கு ரயில் பயணம் அதிகமானது ..... சின்னசாமி தேவர் தோப்பு கிணத்துக்கு குளிக்க போறப்ப போகுற ஒத்தயடி பாதை மாதிரி நீண்டு கொண்டே இருந்த ரயில் பெட்டிகள்.....கோலங்கள் கதை கேட்பதற்காக மட்டுமே அடுத்த வீட்டு கதவை தட்டும் சூழலில் எல்லோருடைய முகத்தையும் பார்த்துகொண்டு பயணிப்பின் சுகம்.. ...எல்லோருடயு முகத்திலும் ஏதோ ஒரு யுத்தத்தை எதிர் நோக்க போவதற்கான வெறி ..... பக்கத்துல உட்கர்ந்துருக்குற குழந்தைகிட்ட ," மாமா கிட்ட வாட செல்லம் ...உனக்கு பொம்மை வேணுமா ? ஐஸ் வேணுமா ?" என குட்டி பாப்பா மூலமாக பெரிய பாப்பாவுக்கு தூது விடும் இளைஞன் இப்படி ..ஒவ்வொரு ரயில்வே ஸ்டேஷனும் எனக்கு வித்யாசமா தெரிஞ்சுது ..... பேறு காலத்துக்காக மனைவிய ரயிலனுப்ப வந்த புருஷன் .அப்போது வெளிப்பட்ட அன்பு . இன்னொரு வீட்டுக்கு விலை பேசப்பட்ட பெண் .கல்யாணம் ஆன 3 வது நாளுல அந்த வீட்டுக்கு போகும்போது பெத்தவங்கள பிரிஞ்சப்ப அழுத அழுகை ,ஒரு பக்கம் புட் பால் மேச்சல ஜெயச்சுட்டு கோப்பையோட சந்தோஷத்த கொண்டாடுன காலேஜ் பசங்க ,வீட்டுல கோவிச்சுகிட்டு வீட்டுக்கு தெரியாம மெட்ராசுக்கு ரயிலேறிய சிறுவன் ... நம்பிக்கையும் திறமையையும் வச்சுக்கிட்டு டிக்கெட் இல்லாமல் பயணம் செய்த சாலை ஓரங்களில் அழகு பொம்மைகள் செய்யும் வடமாநிலத்தவர்கள் , "என்னப்பா இப்பதான் கூடல் நகர் ல கிராசிங் போட்டன் திரும்பவும் கொடை ரோட்ல போட்டுட்டான்" என யாரோ ஆரம்பிக்க அதனை தொடர்ந்து நீண்ட அது சம்பந்தமான பேச்சுக்கள்...
ரயில் முழுக்க சாப்பாட்டு பரிமாறுனாலும் இன்னும் எதாவது மூலையில உட்கார்ந்து சாப்பிடும் வென்டர்கள் ..டிக்கெட் இல்லாம வந்தவங்க கிட்ட கோபம் காட்டுன டீ.டீ.ஆர்..
இப்படி இப்படி இப்படி சந்தோசம் துக்கம் பிரிவு கோபம் பாசம் எல்லாத்தையும் ஒரே இடத்துல ஒரே நேரத்துல நான் பார்த்தது இந்த ரயில் ல மட்டும் தான் .....இப்படி பயணிகள் ரயில் ஒரு புறம் என்றல் மற்றொரு புறம் சரக்கு ரயிலும் என்னை கடந்து சென்றது ..
மதுரைல கறிக்கடையில நானும் என தம்பியும் வேலை பார்ப்போம். ஞாயிற்றுக்கிழமை கடை எல்லாம் கூட்டமா இருக்கும் .,....எதாவது ஒரு நாள் நான் கடைக்கு போகாம காசு கேட்டா எங்க அம்மா சொல்லும் , "வண்டி மாடு உழைச்சு விருதா மாடு திங்கவா" அப்டி னு .... உண்மையிலே என்னைய விட இந்த பழமொழி பயணிகள் ரயிலுக்கு ரொம்பவே பொருந்தும் னு நினைக்றேன் . எந்த துணையும் இல்லாம எதாவது வயக்காட்டுல திரியற சின்ன பசங்க சந்தோஷத்த மட்டும் துணையாய் கொண்டு தனியாவே பயணப்பட்டு பழகிப்போன அந்த சரக்கு ரயில் மீது ஈர்ப்பு ஏற்ப்பட்டது. இல்லை ஒரு பரிவுனு கூட சொல்லலாம் ....
பயணிகள் ரயில் மேக் அப் இல்லாத அழகி என்றால் சரக்கு ரயில் தண்டட்டி போட்ட கருப்பாயி ஆச்சி தான் ...
இத்தனை ரயில்களையும் தாண்டி வயக்காட்டுல ஊளை மூக்கோட டவுசர கையில் புடிசுகிட்டு கமலக்கண்ணன் ராமக்ரிஷன கணேசன் கிருஷ்ணவேணி (இவங்க பெயர் மட்டும்தான் நினைப்புல இருக்கு) மற்றும் பெயர் தெரியாத கூட்டத்துல , ஒன்னாவது ரெண்டாவது படிக்கும்போது நாங்க விட்ட ரயில் வண்டிதான் ரொம்ப பிடிச்ச ரயில் . பால முருகன் கோவில் ல இருந்து தெப்பக்குளம் வரைக்கும் போற அந்த 500மீ தொலைவுக்குள் பயணித்த எங்க ரயில் ஆறு ஏழு ஸ்டாப்ல நிக்கும் .....மலம்பட்டி .நோன்டிகொவில்பட்டி .கள்ளம்பட்டி வழிய கொட்டம்பட்டிவரைக்கும் போயிரும் னு சொல்லி விளையாடினோம்...ஏன்னா எங்க உலகத்துல அந்நைக்கு அந்த ஊர் மட்டும்தான்.
.வைகை இல்லேன்னா பாண்டியன் அதுவும் இல்லையின ஆயிரத்தெட்டு வண்டி ஆனால் அப்போ கடந்து போன கொட்டாம்பட்டி பாசஞ்சர் ரயில் வண்டியில் இப்போ நான் பயணம் செய்ய முடியாவிட்டாலும் அதன் நினைவு மட்டும் தடக் தடக் னு நெஞ்சுக்குள்ள போய்கிட்டு இருக்கு
- புஹாரி ராஜா
வெளியிட்டதற்கு நன்றி காட்சி
http://kaattchi.blogspot.com/2010/04/blog-post_13.html
http://kaattchi.blogspot.com/2010/04/blog-post_13.html

2 comments:
மிக அருமை புஹாரி! இத்தனை நாட்கள் உங்கள் வலைப்பூவை படிக்கவில்லையே என்ற ஒரே குறை என் மனதில் இருக்கிறது. வலைப்பூவில் பதிவு செய்துவிட்டு என்ன எழுதுவது என்று பல நாட்கள் யோசித்து உண்டு. எனக்கு மட்டும் அல்ல, உங்கள் படைப்பை படிக்கும் எல்லோருக்கும் எல்லோருக்கும் எதையாவது எழுதவீண்டும் என்ற ஒரு உந்துதல் இருக்கும் என நான் நம்புகிறேன். உங்கள் கற்பனை திறனுக்கும் கவித்திறனுக்கும் ஒரு பெரிய சலாம்.
heh its nice da. but it took alot of time 4 me to finish reading s this ur writin ah wow really nice.........
Post a Comment